Sunday, September 4, 2011

தர்மம் செய்வதின் அவசியம்!

அல்குரான்:

1. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கி விட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

2. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்

அல்ஹதீஸ்:

1. தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. நபி (ஸல்) அவர்கள்,  மேலும் அவர்கள் கூறினார்கள் மூமீன்கள், முஸ்லிம்கள் தங்கள்  இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்து பிறரையும் பயனடையச் செய்வார்” என்று கூறினார்கள்.

2.”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!  என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார்.  புஹாரி : 1442 அபூஹுரைரா (ரலி).

தர்மம்  எதிர்பாராமல் நிகழும் விபத்து போன்ற ஆபத்துகளை விட்டு பாதுகாக்கும்.

1 comment:

  1. அல்லாஹ் உங்கள் பணியை பொருந்திக்கொள்வானாக ஆமீன்

    ReplyDelete